Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை

   
புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை 4
 

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி தயவாயிரும்
கிறீஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்.


பரலோக பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும்

உலகை மீட்ட சுதன் தேவா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த ஆவி சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தமதிருத்துவ ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.


புனிதமான மரியாளே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனிதரான வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாவீது அரசரின் மைந்தரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தந்தை அனைவரின் மகிமையே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


தேவ தாயாரின் பத்தாவே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னி மரியின் காவலரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ குமாரனை வளர்த்தவரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துவைக் காத்த வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


திருக்குடும்பத்தின் காவலரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீதிமானான வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விவேகமுள்ள வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வீரம் நிறைந்த வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


பிரமாணிக்கமுள்ள வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பொறுமை மிகுந்த வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வறுமை போக்கும் வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தொழிலாளர்களின் வளனாரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


இல்லற வாழ்வின் அணிகலனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர்களின் காவலரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பங்களுக்கு ஆதரவே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதியுற்றோரின் நம்பிக்கையே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


இறக்கும் அன்பரின் காவலரே - - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அலகை நடுங்கச் செய்பவரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருமறையின் பரிபாலகனே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் பங்கின் காவலரே - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


உலகத்தின் பாவங்களைப் போக்கும் உத்தம செம்மறி புருவையாம் உன்னத இயேசுகிறீஸ்துவே - எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் உத்தம செம்மறி புருவையாம் உன்னத இயேசுகிறீஸ்துவே - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் உத்தம செம்மறி புருவையாம் உன்னத இயேசுகிறீஸ்துவே - எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார்.
அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.

செபிப்போமாக:

இறைவா! நீதிமானாகிய புனித சூசையப்பரைக் கன்னியான தேவதாய்க்கு கணவராகத் தந்தருளுனீர். அவருடைய பிரமாணிக்கமுள்ள பாதுகாவலில்தான் மனித மீட்பின் ஊற்றாகிய கிறீஸ்துவை ஒப்படைத்தீர். அந்தப் புனிதரின் உதவியால் நாங்கள் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்ற உமது அருட் கொடைகளை வழங்குமாறு எங்கள் ஆண்டவராகிய கிறீஸது வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமேன்.


திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (100 நாட் பலன்.)





புனித சூசையப்பரிடம் மன்றாட்டு

🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻


புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.

உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.

புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும்.  ஆமென்.

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!