புனித சூசையப்பர் | ஆண்டவரே இரங்கிடுவீர் |
ஆண்டவரே இரங்கிடுவீர் மெசியாவே இரங்கிடுவீர் ஆண்டவரே நாங்கள் செலுத்தும் ஜெபத்தை கனிவுடன் ஏற்றிடுவீர் விண்ணக தந்தையே இறைவனே அருள் வரங்கள் பொழிந்திடுவீர் மனிதனை மீட்ட மெசியாவே அருள் வரங்கள் பொழிந்திடுவீர் இறைவனின் தூய ஆவியாரே அருள் வரங்கள் பொழிந்திடுவீர் மூவொரு இறைவா தூயவரே அருள் வரங்களை பொழிந்திடுவீர் (1) இறைமகன் இயேசுவின் தாயாகும் மாசற்ற கன்னிமரியாவின் கணவரான சூசயே எங்களுக்காக வேண்டிடுவீர் (2) தாவீது அரசரின் வழிமரபில் குல முதல்வர்களில் ஒளிவிளக்காய் தோன்றிய புனித சூசையே எங்களுக்காக வேண்டிடுவீர் (1) கன்னிமரியாம் மாதாவின் மாசற்ற பாதுகாவலனே மெசியாவின் அன்பு தந்தையே எங்களுக்காக வேண்டிடுவீர் (2) திருக்குடும்பத்தை நிழலாக வழிநடத்திய வல்லவரே விவேகமுடைய தந்தையே எங்களுக்காக வேண்டிடுவீர் (1) தைரியமூட்டும் தாரகமே விசுவாசிகளின் அடைக்கலமே தாழ்ச்சிமை நிறைந்த புனிதரே எங்களுக்காக வேண்டிடுவீர் (2) ஏழ்மை வாழ்வின் மாதிரியே தொழிலாளிகளின் காவலரே ஆறுதலின் நல் தந்தையே எங்களுக்காக வேண்டிடுவீர் (1) அர்பணவாழ்வின் நறுமலரே கன்னியர் குலத்தின் காவலரே குடும்பங்களின் ஆதரவே எங்களுக்காக வேண்டிடுவீர் (2) துன்பம் மரணம் வேதனையால் துயருருவோரின் அடைக்கலமே அன்பு தந்தை சூசையே எங்களுக்காக வேண்டிடுவீர் உலகத்தின் பாவங்கள் போக்கும் இறைவனின் செம்மரியே.......... (1) பாவங்கள் பொறுத்தருளும் (2) மன்றாட்டைக் கேட்டருளும் (3) எங்கள் மேல் இரக்கம்வையும். |