புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை
1 ஆண்டவரே இரக்கமாயிரும்(2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2) ஆண்டவரே இரக்கமாயிரும்(2) கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் விண்ணகத் தந்தையே எம் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதன் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய ஆவியாம் எம் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய்மை நிறைந்த மூவொரு இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் புனித மாமரியே..... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித சூசையப்பரே ....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பாதுகாவலரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ..........சூசையப்பரே தாவீது அரசரின் புத்திரனே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மிகப்பெரு தந்தையின் மகிமையே தேவதாயாரின் பத்தாவே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கன்னிமரியாளின் காவலரே தேவகுமாரனை வளர்த்தவரே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கிறீஸ்துவை அன்பாய்க் காப்பவரே திருக்குடும்பங்களின் தலைவரே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உத்தம நீதியில் சிறந்தவரே உத்தம விரத்தம் ஆனவரே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உத்தம விவேகம் கொண்டவரே உத்தம தைரியம் அணிந்தவரே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கீழ்ப்படியும் உள்ளம் .......... தைரியம் உள்ளம் ......... புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பொறுமையின் நல்ல கண்னாடியே தரித்திரத்தின் திரு அன்பனே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தொழிலாளர்களின் மாதிரியே இல்லற வாழ்வின் ஆபரணமே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கன்னியர்களின் காவலரே குடும்பங்களின் பெரும் ஆதரவே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் துன்பப்படுவோரின் ஆறுதலே வியாதிக்காரரின் நம்பிக்கையே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரிக்கிறவோரின் காவலரே பேய்களை நடுங்கிடச் செய்பவரே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித திருச்சபையின் பரிபாலனே இயேசுவை ஏந்தும் பாக்கியனே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நல்மரணம் தரும் பேரருளே எங்களின் பாது காவலனே புனித சூசையப்பரே....... நீர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்கள் பொறுத்தருளும் உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே உங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும் (3) ஆண்டவர் அவரைத் தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார் அவருடய உடமைகளையெல்லாம் நடப்பிற்கவும் ஏற்படுத்தினார் அர்ச். சூசையப்பரைக் குறித்து சுகிர்த மன்றாட்டு! கிருபை, தயாளம் நிறைந்தவருமாய், எங்கள் நேச வணக்கத்துக்கு உரியவருமாயிருக்கிற பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! தேவரீரை மன்றாடி, தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி, உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமல் போனதில்லை என்று அர்ச். தெரசம்மாள் நிச்சயித்ததை நினைத்தருளும். என் அன்புள்ள தகப்பனாரே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, நான் உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக்கொண்டு உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாய் விழுகிறேன். மிகவும் இரக்கமுள்ள பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! சொற்பமும் அயோக்கியமுமாயிருக்கிற என் மன்றாட்டைப் புறக்கணியாமல், தயாபரராய்க் கேட்டுக் கிருபை புரிந்தருளும். |