அர்த்தமுள்ள காணிக்கைப்பவனி |
இப்பொழுது பாணிக்கைப்பவனி தொடர்கிறது கடவுளுக்கு காணிக்கைகளை அளிப்பது நமது நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் அடையாளமாகும். எனவே இப்பொருட்களோடு நம்மையும் இறைவபுக்கு காணிக்கையாக அர்ப்பணிப்போம். மலர்கள் மணம் கமழும் இந்த அழகிய வண்ண மலர்கள் எங்களை மகிழ்விக்கின்றன. நாங்களும் எங்கள் அன்புச் சொற்களாலும், நல்ல செயல்களாலும், ஒருவரை ஒருவர் மகிழ்வித்து, எம்வாழ்க்கையை மணம் கமழச் செய்ய வேண்டுமென்று நினைவூட்டும் இம்மலர்களை, இறைவா உமக்கு காணிக்கையாக்கி,அருட்சாதனங்கள் என்னும் அருட்சாதனத்தால் உன்றிக்கப்பட்ட நாங்கள்,வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, அன்பிலும், பிரமாணிக்கத்திலும, மகிழ்ச்சியிலும் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். மணம் கமழும் இந்த அழகிய வண்ண மலர்கள் போல் நாங்களும் மகிழ்ச்சியில் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். மெழுகுதிரி சுடர் விட்டு எரியும் இந்த மெழுகுதிரி தன்னைத் தியாகம் செய்து எங்களுக்கு கொடுப்பதுபோல,நாங்களும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் தன்னலம் கருதாது மற்றவர்களுடைய நலன்களையே நாடி, எங்களை மற்றவர்களுக்காகத் தியாகம் செய்யும் உயர்ந்த பண்பினை பெற்று வாழ அருள் வேண்டி இந்த மெழுகுதிரியை உமக்குக் காணிக்கையாக்கி, ஒளியான இறைவனை நாடும் நல்ல குடும்பமாக ஒற்றுமையிலும் சமாதானத்திலும் நிலைத்திருந்து, உம் திருமகனுக்கு ஏற்ற சாட்சியாக விளங்கவேண்டுமென்று இந்த மெழுகுதிரியை உமக்குக் காணிக்கையாக்கி இறைவா உம்மை மன்றாடுகிறோம். காய்கனிகள் நிலத்தின் விளைந்த இக்கனிகள், நாங்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆற்றலையும் சக்தியையும் அளிக்கின்றன. எங்களுடைய சான்றுபகரும் கிறீஸ்தவ வாழ்க்கையின் வழியாக, உலகிற்கு சத்தூட்டும் உணவாகவும், சுவைதரும் உப்பாகவும் நாங்கள் விளங்குவதற்கு தேவையான அருளை கேட்டு, இறைவா இவற்றை உமக்கு காணிக்கையாக்கி, புதிய வாழ்வில் காலடி பதித்திருக்கும் தம்பதிகளுக்கு, பெருமை,அழகு, தேகத்திடம், இளமை, நோயின்மை, வாழ்நாள், நல்லூள், கல்வி, அறிவு, துணிவு, நல்மக்கட்பேறு, நெல், பொன் ஆகிய பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ, இறைவா உம்மை மன்றாடுகிறோம். அப்பம் பலகோதுமை மணிகள் ஒன்று சேர்ந்து அப்பங்கள் உருவாகின்றன. அவ்வாறே எங்கள் பங்கிலுள்ள எல்லாக் கிறீஸ்தவ குடும்பங்களும் ஒன்றுபட்டு வாழ்ந்து, ஒரு பங்குச் சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதற்கு அடையாளமாக, இறைவா இந்த அப்பங்களைக் காணிக்கையாக்கி, உடைந்த உறவுகளில் ஒற்றுமையைக்காண இறைவா உம்மை மன்றாடுகிறோம். இரசம் திராட்சைப்பழங்கள் பிழியப்பட்டதால், இந்த இரசம் கிடைத்தது. ஏங்கள் வாழ்வில் நேரிடும் துன்பங்கள், மனஇறுக்கங்கள் வேதனைகள், இவற்றையெல்லாம் இந்த திராட்சை இரசத்துடன் சேர்த்து, உமக்குக் காணிக்கையாக்கி, கானாவில் நடைபெற்ற திருமணத்தில் இரசப்பற்றாக்குறையைப் போக்கி திருமணத்தில் மணமக்களை ஆசீர்வதித்ததுபோல, இம்மணமக்களையும் ஆசீர்வதித்து, அவர்கள் அன்பின் அடையாளமாக நன்மக்களைப் பெற்று என்றும் மகிழ்ந்திருக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். |