திருமண அன்பு |
திருமண அன்பு இறையன்பின் ஊற்றிலிருந்து பிறக்கிறது. திருச்சபைக்கு அன்புசெய்து அதற்காகக் கையளித்த கிறிஸ்த்துவைப் போல மணமக்களும் இறுதிவரை தங்களைக் கையளித்து நிலையான பிரமாணிக்கத்துடன் அன்பு செய்ய வேண்டும். இந்த அன்பிலே ஒருவர் மாண்பை மற்றவர் மதிக்கும் பண்பு உண்டு. உடல் உள்ளம் சார்ந்த அர்ப்பணம் அதிலே அடங்கும். திருமண அன்பு தன்நலமின்றிச் செயலாக்கப் பெறும் போது முழுமையடைகிறது வளர்ந்தோங்குகின்றது வெறும் காம உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது இவ்வன்பு. திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ அச்செயல்கள் நேர்மையானவை மாண்பு பெற்றவை இவ்வன்பு எவ்வித விபச்சாரத்தையும் மணமுறிவையும். புறம்பாக்குகிறது. இன்னலிலே வழிகாட்டி: குழந்தைச் செல்வம் இல்லாத நிலையிலும் திருமணவாழ்வு தொடரவேண்டும். இத்தகைய இன்னலிலும் வழிகாட்டுகிறது இந்தத் திருமண உறவு. மகப்பேறில்லாத திருமணமும் தன் மாண்பை இழப்பதில்லை. மகப்பேறு இல்லாத நிலையிலும் திருமண வாழ்வு தன் மேன்மையை இழ்ந்து விடுவதில்லை. உடலைச் சார்ந்த மலட்டுத் தன்மை வேற பல முக்கிமான பணிகளை ஆற்ற வாய்ப்பாக அமைந்திட இயலும். எடுத்துக்காட்டாக தத்தெடுத்தல், பல்வகையான கல்விப் பணிகளை புரிதல், பிற குடும்பங்களுக்கோ வறுமையால் அல்லது ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கோ உதவி செய்தல், (அனாதை இல்லம் அமைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம் இன்னும் வாழ்விலே இழப்போ நஸ்டமோ எது நேரிட்டாலும். திருமண உறவு தொடரும். இன்னல் மிக்க வாழ்விலும் திருமண வாழ்வு ஒருவொருக்கொருவர் வார்ந்து நிற்கும். ஊன்றுகோல் போன்று உதவி புரியும். இன்னலுற்ற வேளையிலே வழிகாட்ட உதவும. இயலாமை இல்லாமை எது வந்தாலும் இந்த உறவு வாழ்வு தொடரும். |