Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தூய அந்தோனியார் நவநாள்

   

தூய அந்தோனியார்  நவநாள் செபம்

நவநாள் -8

புதுமைகள் பல புரிய அருள் பெற்ற தூய அந்தோணியாரே! எங்கள் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறு பெற்ற தூய அந்தோணியாரே! துன்பப்படுவோருக்கு துணை புரியும் வள்ளலே! ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ, உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம், எங்களுக்காக பரிந்து பேசி எம் ஆன்மாவிற்கும் உடலிற்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத் தாரும்.

இறை அருளை ஏரளாமாய் பெற்ற தூய அந்தோணியாரே! நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, விண்ணுலகம் சேர எங்களுக்கு அருள் பெற்றுத் தந்தருளும்.

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே! மகிமையில் விளங்கும் தூய லீலியே! துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே! அழுவோரின் ஆறுதலே! உம்மை நாடி நிற்கும் எங்களை, உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக் கொள்ளும். துன்ப துயரங்களினின்றும் எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத்தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ்வதற்கு அறியாது வருந்தும் எமக்கு வாழ வழிக் காட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத வியாதிகளை உமது வல்லமை நிறைந்த மன்றாட்டால் எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.

பிரார்த்தனை:

☦️பதுவைப் பதியரான தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️இறை இயேசுவை நிறைவாக அன்பு செய்த தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️ துன்பப்படுவோருக்கு ஆறுதலான தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️நோய்களைக் குணமாக்கும் தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️காணமல் போனவற்றைக் கண்டெடுக்கச் செய்யும் தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️எளியோர்க்கு என்றும் உதவிடும் தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️ உடலை ஒருத்து எளியவராய் வாழ்ந்த தூய அந்தோணியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️திருமறையின் நெறியிலே தூயவராய் வாழ்ந்த தூய அந்தோணியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️ நற்செய்தியைப் போதித்த, திருமறையின் வல்லுனரான தூய அந்தோணியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

☦️பாவத்தினாலும், சாத்தானாலும் துன்புருவோரின் துயர் துடைக்கும் தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

செபிப்போமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! தூய அந்தோணியாரைத் தலைசிறந்த போதகராகவும், எங்கள் தேவைகளில் பரிந்து பேசுபவராகவும் உம் மக்களுக்கு அளித்தீரே, அவரது உதவியால் நாங்கள் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைக் கடைப்பிடிக்கவும், எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் எல்லாம் உமது ஆதரவைக் கண்டுணரவும் செய்வீராக, எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

எட்டாம் நாள் செபம்:

ஓ தூய்மையான புனித அந்தோணியாரே! உமது பரிந்துரையில் நீர் மிகவும் சக்தி வாய்ந்தவரெனக் காட்டியுள்ளீர். தங்களது துன்பத்திலும் துயரத்திலும் உம்மை மதித்து அழைப்போருக்கு நீர் மென்மையாகவும் கருணையுடனும் இருந்துள்ளீர். எனது இன்றியமையாதத் தேவைகளில் என்னைப் பாதுகாத்து, இந்த நவநாள் மூலமாக நான் விரும்பிக் கேட்கும் வேண்டுதல்களை தயவுடன் எனக்குப் பெற்றுத் தரும்படி உம்மைத் தாழ்மையோடும் ஆர்வத்தோடும் வேண்டுகிறேன். கடவுளின் திருமகனின் அரியணைக்கு முன்பாக என் வேண்டுதல்களை உம்முடன் எடுத்துரைக்க, எங்கள் விண்ணக அரசியான அன்னை மரியாவிடம் சிபாரிசு செய்தருளும். ஆமென்.

(உங்கள் வேண்டுதல்களை மௌனமாகச் சொல்லவும். பின்னர், கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழைச் சொல்லவும்)

தூய அந்தோணியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்�



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!