மரியாளின் உதரத்தில் இருந்த இயேசுவுக்கு புகழ் மாலை |
ஆண்டவரே இரக்கமாயிரும் ! கிறிஸ்துவே இரக்கமாயிரும் ! ஆண்டவரே இரக்கமாயிரும் ! கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும் விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா தூய ஆவியாகிய இறைவா தூய்மை நிறை மூவொரு இறைவா ➢ மரியாளின் உதரத்தில் வியப்பாக வனையப்பட்ட இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும். ➢ மரியாளின் உதரத்தில் தூய ஆவியால் கருவாகிய இயேசுவே! ➢ மரியாளின் உதரத்தில் கருவான நொடி முதல் தனித்துவமான மனிதனான இயேசுவே! ➢ படைத்தலின் கடவுளாயிருந்தும் மரியாளின் உதரத்தில் படைப்பாகிய இயேசுவே! ➢ வார்த்தை மனிதனாகி மரியாளின் உதரத்தில் மனிதவதாரம் ஆன இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே மனிதனாய் வளர தன்னையே அனுமதித்த இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே கருவாகிய நொடிமுதல் தன்னுடைய விலை மதிப்பற்ற இரத்தத்தை சிறிய நாடி நாள நரம்புகள் அனைத்திலும் ஓடச்செய்த இயேசுவே! ➢ மரியாளின் உதரத்தில் ஒன்பது மாதங்கள் மறைந்து வாழ்ந்த இயேசுவே ! ➢ இறைமகனாய் இருந்தும் மரியாளின் உதரத்திலே அந்த தனது உன்னத தாயின் உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டப்பெற்ற இயேசுவே! ➢ முடிவில்லா காலத்தில் இருந்து காலங்களுக்குள் தன்னை அடக்க மரியாளின் உதரத்தில் கருவாகிய இயேசுவே! ➢ தந்தையோடும் தூய ஆவியோடும் இணைந்து எல்லா ஞானத்தையும் அனைத்து உண்மையையும், தனது உன்னத தாய் மரியாளுக்க, அவரது உதரத்தில் இருக்கும்போதே வெளிப்படுத்திய இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே தான்தான் மீட்பர் என்னும் தன்னுடைய நிலையை அறிந்திருந்த இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே தன்னுடைய முன்னோரை தூய்மை படுத்திய இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திமரியாளின் உதரத்திலேயை தந்தையால் அரவணைக்கப்பட்ட முடிவில்லா வார்த்தையும் தெய்வீக குழந்தையுமான இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே தன்னுடைய அன்புத்தாயான அவரை அதி உன்னத தூய்மைக்கு உயர்த்திய இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே மோட்சத்தின் முடிவில்லாத பேரின்பமாக இருந்த மரியாளின் இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே அந்த புனித தாயாருக்கு தன்னுடைய மனிதவதாரத்தை வெளிப்படுத்திய இயேசுவே! ➢ தன்னுடைய புனித தாயாரால் அவருடைய திருத்தலமாகிய உதரத்திலே தியானிக்கப்பட்டு ஆராதிக்கப்பட்ட இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே வான தூதர்களால் பணிந்து வணங்கி ஆராதிக்கப்பட்ட இயேசுவே! ➢ அதே வான தூதர்களால், கன்னித்தூய்மையான மரியாளின் உதரத்திலே வார்த்தையானவரின் இரண்டு இயல்புகளின் ஒன்றிப்பையும், இறை குழந்தையின் மனித அவதாரத்தையும் கண்டு, போற்றப்பட்ட இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே தனது பரிசுத்த மூட்டுகள் முதல் முதலில் துளிர்விட்டு வளர உருவான இயேசுவே! ➢ உலகம் முழுவதாலும் அடக்கப்பட முடியாத இறைதன்மை கொண்டவர் வெகு சிறிய நிறை கொண்ட கருவாக மரியாளின் உதரத்திலே காணப்பட்ட இயேசுவே! ➢ அளவுகள் கடந்த இறைவனாய் இருந்தும், அன்று தன்னை சிறிய அங்குலங்களுக்குள் அடக்கி, மரியாளின் உதரத்தில் உருவான இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே அடக்கமான குழந்தையாக இருந்த பலியாடாகிய இயேசுவே! ➢ மரியாளின் உதரத்திலே, தன்னுடைய பாடுகள் மரணத்தினால் அடையப்போகும் வேதனைகளை தாங்கும் மனித திறன் பெற்ற இயேசுவே! ❖ மரியாளின் உதரத்தில் இருந்த இறைவனின் செம்மறியாகிய இயேசுவே எங்களை விடுவித்தருளும் ஆண்டவரே ! ❖ மரியாளின் உதரத்தில் இருந்த இறைவனின் மாசற்றவரான இயேசுவே ! எங்கள் மன்றாட்டை கேட்டருளும் ஆண்டவரே ! ❖ மரியாளின் உதரத்தில் இருந்த இறைமனிதனும் மெசியாவுமாகிய இயேசுவே ! எங்கள் மேல் இரக்கமாயிரும். செபிப்போமாக: படைத்தவரான ஆண்டவரே ! எங்களை நீர் ஆணும் பெண்ணுமாக படைத்து இந்த உலகத்தை பராமரிப்பதில் சமமான பங்காளர்கள் ஆக்கினீர். எங்களுக்குள்ளே பலதரப்பட்ட நம்பிக்கைகள் பன்முக தன்மை கொண்ட கொடைகள், பல்வேறு வகையான இயலாமைகள் காணப்பட்ட போதிலும் சகோதர சகோதரிகளாக இணைந்திருக்கின்றோம். மனிதவதாரம் பெற்ற உமது வார்த்தையாகிய இயேசுவிலும் எங்களிலும் நாங்கள் எதற்காக படைக்கப்பட்டோமோ அது போல் இருப்பது கண்டு அன்பு செய்தீர். அருள் உடையவர்களாய் இருந்தாலும் நாங்கள் வரையறைகளுக்கு உட்பட்டவர்கள். பல வேளைகளில் பலவீனர்களாயும் இருக்கின்றோம். ஆனாலும் எங்களுடைய பலவீனங்கள்னாலும் நீர் எங்கள் மேல் காட்டுகின்ற அன்புக்கு தடையாக இருப்பதில்லை. எங்களுலடய பிறப்பு முதல் எங்களில் என்ன கண்டீரோ அவையனைத்தையும் நாங்களும் எங்களில் காண கற்றுத்தாரும். நாங்கள் அடைந்துள்ள கொடைகளையும் அதே வேளை எங்களுடைய பலவீனங்களையும் கண்டறிய கற்றுத்தாரும். முழுமையான ஞானம் உள்ளவர்களாய் எம்மை அறிந்து உமது பிள்ளைகளாக என்றும் வாழ எங்களை பாதுகாத்து வைத்தருளும். இவையனைத்தையும் கிறிஸ்துவோடும் தூய ஆவியோடும் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மிடம் தாழ்மையோடு கேட்டு நிற்கின்றோம் ஆமென். |