குழந்தை இயேசு | எங்கள் உள்ளம் என்றும் |
எங்கள் உள்ளம் என்றும் வாழும் குழந்தை இயேசு பாலா உந்தன் அன்பில் வாழும் வாழ்வு வேண்டும் எந்நாளும் காக்கும் எங்கள் குழந்தை இயேசு நாதா உந்தன் மீட்பின் காவல் தொடர வேண்டும் குழந்தை உருவாம் இயேசுவே மனுவாய் மலர்ந்த இயேசுவே கள்ளமில்லா உம் உள்ளம் போல் எம்மவர் உள்ளமும் மாற்றிடுவாய் தாவீது வம்சத்தின் திறவுகோலே இஸ்ராயேலின் இல்லமதின் செங்கோலே முடிவில்லா ஒளியின் கதிரவனே அளவற்ற வல்லமை நிறைதருவே அற்புதம் அள்ளித்தரும் பாலகனே அருட்பெரும் செயல்களால் அணைத்திடுவாய் பரமபிதாவின் சித்தத்தினால் தேவதாயிடம் கருவாகி வார்த்தை மனுவாய் உருவாகி வந்த எம் குழந்தை இயேசுவே எம்குறை நீக்கி நிறை செய்வாய் உம் அன்புக் கரமதில் பொதிந்திடுவாய் |