வருகைப்பாடல்கள் | வாருங்கள் அன்பர்களே |
வாருங்கள் அன்பர்களே வாழ்த்து பாட வாருங்களேன் பாருங்கள் தொட்டிலிலே பார் புகழும் மன்னவனை ஆடிடுங்கள் பாடிடுங்கள் மாதவன் அருளை தேடிடுங்கள் வானவன் வருகையில் இணைந்திடவே திருப்பலியில் கலந்திடுங்கள் ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தோம் ஆண்டவரை எதிர் பார்த்திருந்தோம் பாயிரம் ஆயிரம் பாடிடவே பாலகன் மண்ணில் பிறந்தாரே பூஉலகத்தில் எங்கும் அமைதி வர பாலகன் மண்ணில் பிறந்தாரே அவரது பிறப்பினை கொண்டாடவே வாருங்கள் வாருங்கள் வாருங்களேன் பாலகன் இயேசு பிறந்ததினாலே பூவுலகம் இன்று உயிர் பெற்றது ஆலமரம் போல் அவரது அன்பும் அனைவர் மீதும் படர்ந்தது கொண்டாடுவோம் ஒன்றாய் பண்பாடுவோம் ஆண்டவர் வருகையில் அகமகிழ்வோம் திருப்பலியில் இறைமக்கள் நாம் பாலகன் புகழ் பாட இணைந்திடுவோம் |