Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள்    
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் மேசுவே
தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் - எல்லாம்

தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் - எல்லாம்

கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் - எல்லாம்

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் -எல்லாம்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் - எல்லாம்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் - எல்லாம்



 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா