திரு இருதயப்பாடல்கள் | இயேசுவின் இருதயமே |
இயேசுவின் இருதயமே வாழ்வு தாருமே (2) வாழ்விழந்து வதங்கி நின்றேன் வாழ்வாகுமே (2) வாழ்வாகுமே வாழ்வாகுமே இயேசுவின் இருதயமே பார்வை தாருமே (2) பார்வை இழந்து நம்மை மறந்து பார்வையாகுமே (2) பார்வையாகுமே பார்வையாகுமே இயேசுவின் இருதயமே பாவம் போக்குமே (2) பாவம் செய்து பகைமை கொண்டேன் மன்னித்தருளுமே (2) மன்னித்தருளுமே மன்னித்தருளுமே இயேசுவின் இருதயமே நோயை நீக்குமே (2) நோய்கள் தாக்கி வருந்தும் என்னை குணப்படுத்துமே (2) குணப்படுத்துமே குணப்படுத்துமே இயேசுவின் இருதயமே சுமையைத் தாங்குமே (2) சுமைகள் என்னை வாட்டும் நேரம் சுகம் தாருமே (2) சுகம் தாருமே சுகம் தாருமே இயேசுவின் இருதயமே சுத்தம் செய்யுமே (2) சுத்தமில்லா உள்ளத்தை உன் இரத்தம் கழுவுமே (2) இரத்தம் கழுவுமே இரத்தம் கழுவுமே இயேசுவின் இருதயமே மீட்பு தாருமே (2) மீட்பர் உந்தன் விடுதலை என் வாழ்வை மாற்றுமே (2) வாழ்வை மாற்றுமே வாழ்வை மாற்றுமே இயேசுவின் இருதயமே இரக்கம் வையுமே (2) இரக்கம் கொண்டு மன்னித்தென்னை மனிதனாக்குமே (2) மனிதனாக்குமே மனிதனாக்குமே இயேசுவின் இருதயமே வாழ்வு தாருமே இயேசுவின் இருதயமே பார்வை தாருமே இயேசுவின் இருதயமே பாவம் போக்குமே இயேசுவின் இருதயமே நோயை நீக்குமே இயேசுவின் இருதயமே சுமையைத் தாங்குமே இயேசுவின் இருதயமே சுத்தம் செய்யுமே இயேசுவின் இருதயமே மீட்பு தாருமே இயேசுவின் இருதயமே இரக்கம் வையுமே இரக்கம் வையுமே இரக்கம் வையுமே இரக்கம் வையுமே |