Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை  


  • ஆண்டவரே இரக்கமாயிரும் 2
    கிறிஸ்துவே இரக்கமாயிரும் 2
    ஆண்டவரே இரக்கமாயிரும் 2

    கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்

    கிறிஸ்துவே தயவாய் மன்றாட்டை கேட்டருளும்

    விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா - எங்கள்மேல் இரக்கமாயிரும்.

    தூய ஆவியாம் இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்.

    என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய இயேசுவின் திரு இருதயமே

    கன்னிமரி வயிற்றில் தூய ஆவியால் பிறந்து ஒளிர்ந்த இயேசுவின் திரு இருதயமே

    தேவவார்தையான சுதனோடு ஒன்றித்து இருக்கின்ற இயேசுவின் திருஇருதயமே

    அளவற்ற மகத்துவம் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திரு இருதயமே

    இறைவனுடைய அர்ச்சிக்கபபட்ட ஆலயமாகிய இயேசுவின் திரு இருதயமே

    அதிஉன்னத உறைவிடமாகிய ஆண்டவரின் இயேசுவின் திரு இருதயமே

    இறைவன் இல்லமும் விண்ணகத்தினுடைய வாசலுமான இயேசுவின் திரு இருதயமே

    அன்புத்தீ சுடர்விட்டெரியும் சூளையாகிய இயேசுவின் திரு இருதயமே

    நீதியும் அன்பும் தங்கிய இல்லிடமாகிய இயேசுவின் திரு இருதயமே

    தயாளமும் நேசமும் நிறைந்து புதைகின்ற இயேசுவின் திரு இருதயமே

    சகல புண்ணியம் முழுமையாக நிறையப்பெற்ற இயேசுவின் திரு இருதயமே

    எல்லா ஆராதனை புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திரு இருதயமே

    இதய அரசு அனைத்திற்கும் மகிமையுடனான இயேசுவின் திரு இருதயமே

    பிதாவுக்கு உகந்த இயேசுவின் திரு இருதயமே

    ஞானமும் அறிவும் நிறைந்த முழு நிறைச் செல்வமான இயேசுவின் திரு இருதயமே

    இறைத்தன்னை முழுமையாய் தங்கி வாழும் இயேசுவின் திரு இருதயமே

    பிதாவிற்கு உகந்த பிள்ளையான நேசமுள்ள இயேசுவின் திரு இருதயமே

    எண்ணிறந்த நன்மைகளை நாங்களெல்லாம் பெற்று மகிழச் செய்கின்ற இயேசுவின் திரு இருதயமே

    என்றைக்கும் நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திரு இருதயமே

    பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள இயேசுவின் திரு இருதயமே

    மன்றாடும் அனைவருக்கும் நிறைவை அளிக்கின்ற இயேசுவின் திரு இருதயமே

    மனிதவாழ்வுக்கும் தூய நிலைக்கும் ஊற்றாகிய இயேசுவின் திரு இருதயமே

    பாவங்களின் மன்னிப்புக்கேற்ப பரிகாரமாகிய இயேசுவின் திரு இருதயமே

    நிந்தை அவமானம் நிறைந்து மிகுந்து காயப்ப்பட்ட இயேசுவின் திரு இருதயமே

    எங்கள் பாவச் செயல்களால் வேதனை வருந்திய இயேசுவின் திரு இருதயமே

    மரணம் வரையும் எல்லாம் ஏற்று கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திரு இருதயமே

    ஈட்டியால் குத்தி ஊருடுவப்பட்ட இணையில்லாத இயேசுவின் திரு இருதயமே

    ஆறுதல் அனைத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இயேசுவின் திரு இருதயமே

    எங்கள் உயிரும் உயிர்ப்புமாய் மாட்சி பொருந்திய இயேசுவின் திரு இருதயமே

    எங்கள் சமாதான ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திரு இருதயமே

    பாவங்களின் பலியான செம்மறியாகிய இயேசுவின் திரு இருதயமே

    உம்மில் நம்பிக்கை இருப்போர்க்கெல்லாம் மீட்பான இயேசுவின் திரு இருதயமே

    உம்மில் இறப்போரின் நம்பிக்கையாகிய இயேசுவின் திரு இருதயமே

    புனிதர்கள் அனைவரின் பேரின்பமாகிய இயேசுவின் திரு இருதயமே

    உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
    எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

    உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
    எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

    உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
    எங்கள்மேல் இரக்கமாயிரும்


    இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே!
    எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

    செபிப்போமாக:

    சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும், ஸ்துதி புகழ்ச்சியையும், கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.



    🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹


    (இதய ஆண்டவரிடம் இந்த  ஜெபங்களை ஜெபித்து இறையாசீரை பெருவோம்)


    இயேசு நாதருடைய திருஇருதயத்துக்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்
    🕯️💞🕯️💞🕯️💞🕯️💞

    இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம்.

    நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.

    இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

    திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும்.  - ஆமென்.


    👑🌏👑🌏👑🌏👑🌏👑
    இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்


    ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.


    சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக. எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.


    ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.




    இயேசுவின் திரு இருதயச் செபமாலை
    💞🕯️💞🕯️💞🕯️💞🕯️💞🕯️


    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

    கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, -என்னைத் தூய்மையாக்கும்
    கிறிஸ்துவின் திரு உடலே, -என்னை மீட்டருளும்.
    கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும்.
    கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும்.
    கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும்.

    ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
    உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
    உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
    பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
    என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும்
    உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென்.

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா