Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள்  இயேசுவின் நாமமே திருநாமம்  


இயேசுவின் நாமமே திருநாமம்
முழு இருதயத்தால் தொழுவோம் நாமம்

காசினியில் அதனுக் கிணையில்லையே
விசுவாசித்த வர்களுக்குக் குறையில்லையே - இயேசுவின்

இத்தரையில் மெத்த அதிசய நாமம்
அதைநித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - இயேசுவின்

உத்தம மகிமைப் பிரசித்த நாமம்
இது சத்திய விதேய மனமொத்த நாமம் - இயேசுவின்

விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்
நமை அண்டிடும் பேய் பயந்தோடுந் தேவநாமம் - இயேசுவின்

பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி
பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - இயேசுவின்




 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா