திரு இருதயப்பாடல்கள் | இயேசுவின் இனிய இருதயமே |
இயேசுவின் இனிய இருதயமே இரக்கம் மிகுந்த இருப்பிடமே (2) தேனமுதே திரவியமே தெய்வீகப் பேரொளி திருமகனே ஆ......ஆ......ஆ.......ஆ........ நற்கருணை நாதரின் மாண்புயர் நாமத்தை தாழ்ந்து பணிந்து வணங்கிடுவாய் (2) மீட்பின் பெருமையின் சுடரொளியேற்றி (2) மாட்சியின் மன்னனைப் புகழ்ந்திடுவோம் (2) ஆ......ஆ......ஆ.......ஆ........ நானிலம் போற்றும் மறைபொருள் உண்மையின் விண்ணகம் கொண்ட திருவருட்சாதனம் திருவுடல் திரு இரத்தம் திருவிருந்தே (2) திரியேக தேவனின் சங்கமமே (2) |