திரு இருதயப்பாடல்கள் | உன் மீட்பின் விலை என்னவென்று |
ஓ என் இயேசுவே நன்றி கூறுவேன் நான் நன்றி கூறுவேன்.. உன் மீட்பின் விலை என்னவென்று அறிவாயோ ஓ நெஞ்சமே அழிந்திடும் பொன்னும் வெள்ளியும் அல்ல விலைமதிப்பில்லா இயேசுவின் திரு இரத்தமே -2 இறைச்சித்தம் நிறைவேற்ற இறைமகன் வந்தார் இரக்கமே கொண்டு இரத்தம் சிந்தி மீட்டார் -2 சிலுவையில் தொங்கி நம் சிறுமைகள் கலைத்தார் சினம் தாழ்த்தி பலியாக தன்னையே தந்தார்-2 என் அன்பு இயேசுவே நான் நன்றி கூறுவேன் -2 புதிய உடன்படிக்கை புவியில் இறைவன் செய்தார் அதை உதிரம் சிந்தி இயேசு உறுதி செய்து தந்தார் -2 இதை விட அன்பு இருக்குமோ எங்கும் இறை மைந்தன் இயேசுவின் அன்பை போல -2 என் அன்பு இயேசுவே நான் நன்றி கூறுவேன் - 2 |