Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள் தன்னை முழுதும் எமக்குத்  

தன்னை முழுதும் எமக்குத் தந்த இயேசுவின் இதயம்
இது எல்லையில்லா அன்பு பொழிந்த பல்கலைக்கழகம
ஆவலுடனே அவர் இதயம் நாமும் சேருவோம் - நல்
 ஆசையுடன் அவரிடமே கற்றுக் கொள்ளுவோம்

நிசநிசா நிசநிசதாபா
ஸநிஸநிதாநி ஸநிகமதாமா மகா

தந்தையே இவர்களை மன்னியும் என்று
   நம் பாவம் ஏற்றது நம் இயேசுவின் இதயம்
உன் பிணிகளை நானே சுமந்தேன் என்று
  நம் நோய்கள் ஏற்றது என் இயேசுவின் இதயம்
பாசம் நிறையவே தங்கிடும் இதயம்
இது நாளும் நம்மையே தாங்கிடும் இதயம்

ஞானமும் அறிவும் முழுமை கொண்ட
    நல் ஊற்றானது இயேசுவின் இதயம்
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான
  என்று இதயம் சேருவோம் நாம் காண்போம் இதயம்
நீதியும் அன்பும் நிலைத்திடும் இதயம்
இது என்றும் நம்மையே நினைத்திடும் இதயம்


 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா