Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள்   நம்மை அன்பு செய்யும் இதயம்  


நம்மை அன்பு செய்யும் இதயம்
என்றும் அரவணைக்கும் இதயம் (2)
நம் இயேசுவின் தூய இதயம் - 2
இதயம் - 2 நம் இயேசுவின் தூய இதயம் - 2

ஏழை எளியோருக்கு இறையரசை வாக்களித்த இதயம்
துயருறுவோர்க்கு ஆறுதல் அளிக்கும் இதயம் (2)
கனிவோணட பணிவிடை செய்ய பணித்த நல் இதயம் (நம்மை)
இரக்கம் மிகுந்தோர்க்கு இரக்கமளிக்கும் இதயம் - நம் இயேசுவின்....

தூய உள்ளம் கோண்டோர்க்கு தரிசனம் தரும் இதயம்
நீதிக்காய் உழைப்போர்க்கு நிறைவு அளிக்கும் இதயம் (2)
அமைதியை அவனியில் விதைக்கப் பணித்த நல் இதயம் (நம்மை)
சுமை சுமந்து சோர்ந்தோர்க்கு இளைப்பாறுதல் தரும் இதயம் - நம் இயேசுவின்....


 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா