திரு இருதயப்பாடல்கள் | இயேசுவின் தூய இதயமே |
இயேசுவின் தூய இதயமே எங்களைக் காக்கும் பேரன்பே (2) இயேசுவின் மதுர இதயமே சாந்தமும் தாழ்ச்சியும் தருவீரே பேரன்பே பேரன்பே இயேசுவின் இருதயமே பேரன்பே பேரன்பே இயேசுவின் இருதயமே சுமைகளைச் சுமக்கும் இயேசுவே சிலுவை வழியே மீட்டவரே பாவிகள் எம்மை மன்னிப்பீரே பரிவுடன் எம்மை அணைப்பீரே உன்னருள் பொழிந்து காப்பீரே பேரன்பே பேரன்பே இயேசுவின் இருதயமே பேரன்பே பேரன்பே இயேசுவின் இருதயமே இரக்கத்தின் இதயத்தைக் கொண்டவரே அன்பின் ஆன்மாவைத் தருபவரே திருக்காயங்களுக்குள் மறைத்தீரே (2) ஆறுதல் தந்து தேற்றுவீரே (2) எம் உள்ளம் எழவே வருவீரே பேரன்பே பேரன்பே இயேசுவின் இருதயமே பேரன்பே பேரன்பே இயேசுவின் இருதயமே |