திரு இருதயப்பாடல்கள் | இதயத்தின் இரக்கம் |
இதயத்தின் இரக்கம் இகமெல்லாம் பொங்கி நிரம்பி வழிந்திடுமே திருந்திடும் மனிதர்கள் அனைவருக்கும் மனதினில் அமைதி பொழுந்திடுவார் மனதின் வேதனை அவரே அறிவார் எனது தேவைகள் கேட்காமல் தருவார் கூப்பிடும்போது குரல் கொடுப்பார் சோதனை வேளையில் காத்திடுவார் மனமுருகிக் கேட்கும்போது மறுப்பதில்லை பொறுப்புடனே வேண்டும்போது தவிர்ப்பதில்லை சுமைகளைத் தாங்கிட வல்லமை தருவார் சோதனைகள் தீர்த்திட சிந்தனை தருவார் துன்பங்கள் அனைத்தும் நீக்கிடுவார் கேட்கும் வரமெல்லாம் தந்திடுவார் மனமுருகிக் கேட்கும்போது மறுப்பதில்லை பொறுப்புடனே வேண்டும்போது தவிர்ப்பதில்லை |