திரு இருதயப்பாடல்கள் | இருதயராஜா அருமைத் தேவா |
இருதயராஜா அருமைத் தேவா - திருக் கையின் பெரும் ஆசீர் தாரும் தூயா பாவம் போக்க புவி வந்த பரமன் நீயே - இப் பரதேச வாழ்வில் எம் பாதையும் நீரே பலமாகப் பற்றினேன் - பாதமலர் உந்தன் பயமேதும் இன்றியே பாதுகாத்திடாய் நிகரில்லாப் பரமன்பின் நிறைவாகவே - இம் மிகச்சிறு இல்லம் தன்னில் மறைவாகவே மகிழ்வாக வாழ்க நீர் - மனம் வைத்தனை உம் புகழ் பாடிப் புவி வாழ்வோன் புனிதர் கோனே |