திரு இருதயப்பாடல்கள் | எனது இருதய அன்பில் |
எனது இருதய அன்பில் நிலைத்திருந்தால் எல்லா நன்மைகளும் நீங்கள் பெறுவீர்கள் 2 சுமை சுமந்து சோர்ந்த என் இதயங்களே உங்களின் துயரம் எந்தன் தோள்களிலே உங்களுக்காக நான் பிறந்தேன் சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தினேன் கல்வாரியில் பலியானேன் ஆ.. ஆ.. ஆ.. ஏழை எளிய மனதோடு வாழ்பவரே மனதினில் தாழ்ச்சியும் இரக்கமும் உள்ளோரே விண்ணகப் பேரின்பம் உங்களுக்கே என் திருக்கரங்களால் ஆசீர் அருள்வேன் இதயத்தில் சுமந்திடுவேன் ஆ.. ஆ.. ஆ.. கிறீஸதுவின் திரு இருதயமே! பல்வேறு துன்பங்களாலும் கவலைகளாலும் வருந்தி உம்மை நோக்கி கூவியழைக்கும் இந்த அன்பர்களைப் பாரும். உமது புனித இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பின் அழுத்தத்தால் உம்மை நாடி வந்திருக்கும் எங்களுக்கு உமது அருளாற்றலைத் தாரும் இயேசுவே! எனது அன்புச் செல்வங்களே! எனது அன்பு ஆசீர் உங்கள் அனைவர்மீதும் எப்பொழுதும் இருப்பதாக! |