Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திரு இருதயப்பாடல்கள் எல்லாம் உமக்காக  
எல்லாம் உமக்காக
இயேசுவின் திவ்விய இருதயமே
எல்லாம் உமக்காக

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2
உன் புகழ் அதிமிக மகிமைக்கே

ஒளியை நாடா மலரில்லை
நீரை வேண்டா வேரில்லை - 2
நின் புகழ் தேடா வாழ்வனைத்தும் - 2
வாழ்வில்லை அதனால் பயனில்லை

வழியும் ஒளியும் உறுதுணையும்
வாழ்வின் நிறைவும் நீரன்றோ - 2
உன் நாமம் ஒன்றே வேண்டி நின்றேன் - 2
என்றும் திரு பாதம் சரணடைந்தேன்






 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா