1122-தேன் இனிமையிலும் |
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கசடதை உத்தரித்தே பாவ கசடத்தை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்க தாவியே உயிரை தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவாழ்வுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கி விடும் - என்றும் கத்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே |