Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயப்பாடல்கள்

  1120-கலை ஒன்று கற்க வந்தேன்  
கலை ஒன்று கற்க வந்தேன்
அன்பின் களஞ்சியமே யேசு இருதயமே
உன்னில் கலை ஒன்று கற்க வந்தேன்
தூய்மையிலே வளர்ச்சி தியாகத்திலே வளமை
பிறர்நலம் பேணலிலே முழுமை - இந்த

உலகம் என்னும் பள்ளியிலே
பல்லாண்டு கற்று வந்தேன் - 2
நிலையான தூய்மையினை நேற்றுவரை கற்கவில்லை
அலைபோன்ற ஆசையிலே
அலை மோதி மூழ்கினேன் - எனவே

உடல் என்னும் கலைவாணன்
உடனிருந்தே கற்றுத் தந்தான் - 2
இடமில்லை தியாகத்திற்கு இன்றுவரை - அப்படித்தான்
உடல் கொண்டே வழிபடாது
உடல் சிலையை வழிபட்டேன் - எனவே
 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா