1119-எரியும் இதயம் பாரீரோ |
எரியும் இதயம் பாரீரோ யேசுவின் இருதயம் பாரீரோ எரியும் நெருப்புத் தெரிகின்றதோ - அதில் யேசுவின் அன்பு புரிகின்றதோ - 2 இறைவன் நம்மிடம் வந்தார் - தம் இதயத்தை திறந்தே தந்தார் - 2 நிறைந்தோம் அந்த உள்ளத்திலே - நாம் மறைந்தோம் அன்பு வெள்ளத்திலே வருவீர் வரவீர் என்றார் நம் வருகையைப் பார்த்தே நின்றார் - 2 இருதய மாளிகை நமக்காக - அங்கு இன்னருள் சுரந்தது நமக்காக நெஞ்சினில் திறந்தது வாசல் - அங்கு நெருப்பாய் எரிந்தது அன்பு - 2 தஞ்சம் தஞ்சம் என்பார்க்கு - அவர் தஞ்சம் தருவார் நெஞ்சத்திலே |