Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயப்பாடல்கள்

  1118-இயேசுவின் இருதயமே  
இயேசுவின் இருதயமே - என்றும்
எரிந்திடும் அருள் மயமே - உந்தன்
ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் - எங்கள்
ஆனந்தம் நிலைபெறுமே

இறைவனுக்கிதயமுண்டு - அந்த
இதயத்தில் இரக்கமுண்டு - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால் - எங்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியுண்டு

கடவுளின் கருணையுண்டு - அந்த
கருணைக்கு உருவம் உண்டு - அவர்
உருவத்தில் உயிர்த்தெழும் உயிரால்
எங்கள் உள்ளத்தில் உவகையுண்டு

பாவிக்குப் பொறுத்தலுண்டு - அந்தப்
பரலோக வாழ்வு உண்டு - நாங்கள்
கூவிடும் குரலைக் கேட்பதற்கு - இந்த
கோயிலில் தெய்வம் உண்டு

 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா