Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயப்பாடல்கள்

  1117-இரக்கத்தின் ஆண்டவரே  


இரக்கத்தின் ஆண்டவரே எம் மீது இரக்கம் வையும்
அன்பான என்
இரக்கத்தின் ஆண்டவரே எம் மீது இரக்கம் வையும்

அளவில்லா இரக்கம் கொண்டவரே
அனுதினம் என்னை ஆழ்பவரே

ஆறுதல் என்னில் தருபவரே
அமைதியை என்னில் அளிப்பவரே

ஆபத்தில் உதவும் தூயவரே
அழைத்திடும்போது வருபவரே

அழுகையில் ஆறுதல் தருபவரே
அன்பாயத் தேற்றி அணைப்பவரே

துன்புறுவோர் துயர் துடைப்பவரே
துணை வந்து என்னை ஆழ்பவரே

நிம்மதி வாழ்வில் தருபவரே
நீங்காதென்னில் நிலைப்பவரே

கண்ணீர் யாவும் துடைப்பவரே
கருணைக்கண் நோக்கிப் பார்ப்பவரே

நிலவாய் இதயத்தில் இருப்பவரே
நீங்காதென்னில் வாழ்பவரே

பாவங்கள் என்னில் தீர்ப்பவரே
பாசத்தை என்மேல் பொழிபவரே

நீதியை என்னில் தருபவரே
நிம்மதி நிலவிடச் செய்பவரே

தாயாய் என்னைக் காப்பவரே
தந்தையாய் என்னை அணைப்பவரே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா