திரு இருதயப்பாடல்கள் | எல்லையிலா உன் இரக்கத்தைக் கொண்டு |
எல்லையிலா உன் இரக்கத்தைக் கொண்டு தொல்லையெல்லாம் தீர்த்துவிடும் இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் மன்னிப்பின் குரலினை முதல் முதல் எழுப்பி மாந்தரின் பாவத்தைப் போக்கிவிடும் உயிருட்டும் தந்தையின் கரங்களைப் பிடித்து குருதியின் குரலினை எழுப்பி நின்ற சிலுவையை எடுத்து அன்பின் குரலில் சீராக்கி உலகை நிறைத்து நின்ற தந்தையின் கரங்களில் உம் உயிர் தந்து தலைசாய்த்து எனக்காய் உயிரளித்த பொன்னான மேனியெல்லாம் புண்ணாகி நலிந்திட உண்டான காயமெல்லாம் தானோங்கிய விடிவும் இழப்பும் எனக்காய் ஏற்று அழியும் ஆன்மாவை மீட்க வந்த மெய்யான பலியாய் எனக்காய் மாண்டு பொய்யான வாழ்வினை முறியடித்த கடற்கரை மணலாய் என் பாவத்தை மீட்டு கண்ணீர் வடித்து உயர்ந்து நின்ற ஈட்டியால் சிதைந்த இதயத்தைக் கொண்டு இணையில்லாத அன்பினை பொழிந்த மூன்று ஆணியால் முழுவுடல் தொங்க முள்முடி சிரசில் வேதனை ஏற்ற |