Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயப்பாடல்கள்

  -இயேசுவின் மதுர திருஇருதயமே  
இயேசுவின் மதுர திரு இருதயமே
சிநேகத்தின் இருதயமே
தினமும் நீர் எங்கள் சிநேகமாய் இருப்பீர்
தேவ தயாநிதியே

மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க
மனுமகனாய் பிறந்தார்
மகிமை பிரதாப கடவுளால் உன்
மாபலி நீ சுமந்தாய்
கள்ளனைப் போல கசடர்கள் உன்னை
கடுஞ்சிலுவையில் அறைந்தார்
கருணையால் உந்தன் இருதய அன்பின்
தயவால் கண்டறிவார்

உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய்
உனக்கென வைத்தாயோ
ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓங்கிய இருதயமே
இன்று எம்மோடு இருந்தருள் ஈவாய்
இனிய நல் உணவாக
இவையெல்லாம் பாரா வீணர்கள் நாங்கள்
இருந்துமே பழித்தோமே

நன்மைமேல் நன்மை என்றுமே செய்வாய்
நாங்களுமே தீமை செய்தோம்
நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம்
நாணியே போதனரோ
எங்களைப் பாரும் இடர் குறை தீரும்
இனிய நல் இருதயமே
எந்தெந்தப் பாவ தந்திரம் நின்று
இரட்சிப்பதுன் பொறுப்பே

தாய் மறந்தாலும் நீ மறப்பாயோ
தயை உனக்கியல்பாமே
தாழ்மையாப் பணியும் பாலர்கள் நாங்கள்
தயை தயை தயை சுவாமி
அன்பிய காலம் வந்திடும் காலே
அவஸ்தையாய் நான் கிடந்தால்
அடைக்கலம் தஞ்சம் ஆக நீ இருப்பாய்
அன்புள்ள இருதயமே


 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா