-சரணம் சரணம் இதயம் சரணம் |
சரணம் சரணம் இதயம் சரணம் இயேசுவின் இதயம் சரணமே அன்பின் முழுமை இதயம் சரணம் இயேசுவின் இதயம் சரணமே தேற்றும் இதயமே ஆசீர் வழங்குமே அணைக்கும் இதயமே என்றும் சரணம் சரணமே இருதய அன்பில் ஆனந்தம் பொங்கிடும் இறைவழி வாழ ஆறுதல் நிறைந்திடும் - 2 அன்னைபோல நம்மைத் தாங்கும் இயேசுவின் இதயம் சரணம் சரணம் இருதய அன்பில் புதுமைகள் நிறைந்திடும் குறையின்றி வாழ நல்வழி கிடைத்திடும் - 2 பாதை தந்து பயணம் செல்ல நடத்தும் இதயம் சரணம் சரணம் இருதய அன்பில் வரங்களை பொழிந்திடும் நோயின்றி வாழ நலம்பல வழங்கிடும் - 2 விரும்பி வந்து குணமளிக்கும் இதய ஆண்டவா சரணம் சரணம் |