-இருதயமே இருதயமே |
இருதயமே இருதயமே இயேசுவின் திரு இருதயமே (தொகையறா) இருதயமே இருதயமே இயேசுவின் திரு இருதயமே இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே- 3 உம்மைத் தேடி அருள் நாடி வருகிறோம் துயர் போக்கும் துணை நாடி வருகிறோம்-2 என்னைப் பாதுகாக்க அருகில் இருக்கிறாய் என்னை காப்பாற்ற உள் உறைகிறாய் (2) நாளும் வழிகாட்ட முன் நடக்கிறாய் எங்கள் காவலாக பின்தொடர்கிறாய் எம்மை ஆசிர்வதிக்க என்றும் அருளால் நிரப்ப நாளும் (2) என்னாலும் என்மேல் அரண் ஆகிறாய் இருதயமே இருதயமே.... மன பாரம் சுமந்து அமைதி தருகிறாய் உடல் நோய் நீக்கி உள்ளம் நிறைகிறாய் (2) எங்கள் இயலாமை பொறுத்து அருள்கிறாய் எங்கள் இயக்கம் ஆகி இயங்கச் செய்கிறாய் எங்கள் வாழ்வின் மையம் நீயே நீங்காத சொந்தம் நீயே-2 என் வாழ்வின் நிறைவே நீர்தானையா இருதயமே இருதயமே...... |