புனித பேதுறு பாவிலு | 1175-விளக்கேற்றுவோம் நாம் |
விளக்கேற்றுவோம் நாம் விளக்கேற்றுவோம் சுடர் வீசும் விசுவாச விளக்கேற்றுவோம் உளமெங்கும் வீடெங்கும் ஊரெங்கும் உலகெங்கும் உவந்திட மானிடர் அன்புடனே இன்று நீர் கிறிஸ்துவானவர் தேவ சுதன் என்று நேராக விசுவாச உச்சாரணம் செய்து பார்மீது திருச்சபைக் கஸ்திவாரமாகி பாறையென்றே பெயர் கொண்ட இராயப்பர் போல தீபம் வளர்த்து தெருவில் விளங்க தீமை வீழ்ந்து தெய்வம் துலங்க அன்பு விரிந்து அமைதியாவும் அவனியில் இன்பம் ஆறாய்ப் பெருக வாழ்வின் ஒளியை உலகம் போற்ற வாய்மைச் சுடரை உள்ளத்தில் ஏற்ற வறுமை நீங்கி வளமை ஓங்க வாழ்வு செழித்து வையகம் திறக்க என்னைக் கிறீஸ்துவின் அன்பில் நின்றகற்ற யாரால் கூடுமென்று வாக்கனல் பற்ற சொன்ன சின்னப்பர் போல் இடர் கூடி அலையாகச் சூழ்ந்தாலும் மலைபோல் அசையாமல் அஞ்சாமல் |