புனித பேதுறு பாவிலு | 1174-வான் வீட்டின் காவலனே |
வான் வீட்டின் காவலனே வையகம் போற்றிடும் பேதுருவே இறைவழி நின்று திருமறை வளர இன்னுயிர் ஈந்த திருத்தூதரே எங்கள் பேதுருவே! உம்மைப் போற்றுகின்றோம் எங்கள் பேதுருவே ! உம்மை வாழ்த்துகின்றோம் ஓ பேதுருவே ! எங்கள் அன்புருவே அடியவர் எமக்காய் வேண்டிக்கொள்ளும் கலிலேயாக் கடலின் ஆழத்திலே இயேசுவின் ஆற்றலில் திகைத்து நின்றீர் மனிதரைப் பிடிக்கவே அழைக்கப்பெற்றீர் அனைத்தையும் துறந்தே பின்தொடர்ந்தீர் உம்மைப் போலவே நாங்களுமே (2) ஆர்வமாய் இயேசுவைப் பின் தொடர்வோம் பாறை உன்னில் திருச்சபையை பாசமாய் இயேசு கட்டுவித்தார் ஆயனாய் இயேசுவின் ஆடுகளை அன்பினால் நடத்திடும் பணி ஏற்றாய் உம்மைப்போலவே நாங்களுமே (2) ஆர்வமாய் இயேசுவைப் பின் தொடர்வோம் |