புனித பேதுறு பாவிலு | 1173-அருமை நேச பிரிய ஞான |
அருமை நேச பிரிய ஞான குரவரான முனிவராம் அரிய தந்தை தூய சம்பேதுரு அனுதினமும் வாழ்கவே பாலரை நாடி ஊர் ஊராய் ஏறி பாவ நிழலகற்ற வந்தீரே பாதகனான பாவி போலானீர் வையக மீதில் தேவனுக்காய் பொன்மணி குவியல் புவியிடை வெறுத்து ஞான நல் வேதங்களுரைத்தீரே துன்பம் பிணிகள் சோகம் தீர்த்து நன்மைகள் செய்தீர் இவ்வுலகில் நேச தூயன் தாசர் காவலன் ஆசீரருளி ஆதரிப்பீர் நேசம் சேரும் உந்தன் மோட்சமதில் தாசர் எங்களைச் சேர்த்திடுவீர் |