Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய குழந்தை தெரேசாள் புனித வாழ்வின் மாதிரியே  

புனித வாழ்வின் மாதிரியே
புனித குழந்தை தெரசாவே - 2
கண்டன் விளையின் காவலியே
கண்மணிபோல் காத்திடுவாய்
எங்கள் ஊரின் காவலியே
கண்மணி போல் காத்திடுவாய்

சிறுமலரே தெரசாளே எங்கள் பாதுகாவலியே -2
அதிசயம் அற்புதம் புரிந்து எம்மை வாழவைப்பாய் -2
புனித வாழ்வின் மாதிரியே புனித குழந்தை தெரசாவே - 2

புதுமைகள் பல புரிந்தவளே
புன்னகை பூவாய் பூத்தவளே-2
ரோஜா மாரி பொழிவது போல் -2
அருள் வளங்களை பொழிந்திடுவாய்

அன்பும் அருளும் கொண்டவளே
இறை வடிவாய் திகழ்ந்தவளே-2
உந்தன் ஜெபமும் உந்தன் அருளும் -2
எந்தன் வாழ்வை மகிழ செய்யும்






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!