தூய குழந்தை தெரேசாள் | 1162-சிறுமலரே சின்ன ராணியே |
சிறுமலரே சின்ன ராணியே சிறுவழி தந்தவளே (என்)-2 உன் நறுமணம் கமழ்ந்திடும் நானிலமெங்குமே நல்வழி தந்தவளே குழந்தை தெரசாளே பணிபெற விரும்பவில்லை நீர் பயன்பெற நினைத்ததில்லை -2 உம் பாசத்திற்களவில்லை உம் பெருந்தன்மைக்கெல்லையில்லை - 2 பாடும் மனமே தேடும் தினமே பிறர்நலம் பேணும் பேரன்பினையே சிறுசிறு செயல்களையே நீர் செம்மையாய்ச் செய்தாயே - 2 உம் குழந்தை உள்ளமே பல குறைகளைப் போக்கிடுதே - 2 தூய நெறியை துன்பங்கள் வழியில் துணிவுடன் துலங்கிட செய்த நீ வாழி |