தூய வியான்னி | குருக்களின் தூயவரே |
குருக்களின் தூயவரே எங்கள் அன்பின் புனிதரே மகிழ்வோம் குருத்துவ குலங்களே வாழ்த்திப்போற்றுவோம் வியானியை விண்ணக வாசல் நுழைந்த நாளிது மண்ணகம் மகிழும் இனிய நல்நாளிது அன்பர் இயேசுவின் பணியில் இணைந்தாயே மானிடர் பாவம் நீக்கி ஆசீர் பொழிந்தாயே விண்ணக வாசல் காட்டி நின்றாயே குருத்துவ வாழ்வின் புனிதம் கண்டாயே வாழ்க புனித வியான்னியே வாழ்க வாழ்க வாழ்கவே அருள்நிறை மரியின் பண்பில் இணைந்தாயே மக்கள் பசிபிணி போக்கி மகிழ்ந்தாயே தந்தையாய் என் இதயம் நுழைந்தாயே குருத்துவ வாழ்வின் தலைமை கண்டாயே வாழ்க புனித வியான்னியே வாழ்க வாழ்க வாழ்கவே |