Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய வனத்து அந்தோனியார் அன்புப் பெருக்கால்  

அன்புப் பெருக்கால் இறைவனை
ஒரு வனத்திலே தொழுத எம் புனிதரே
வனத்து அந்தோனியாரே
உம்மை வணங்கியே உன்னடி தொழுகின்றோம்

தாழ்ச்சியில் உள்ளம் திறந்திட விளங்கிட
ஜெபமும் தவமும் செய்தவரே
ஏழ்மைக்கில்லமதாய் சாத்தானை விரட்டி
கட்சிகளை வென்றவரே
இறை வழியில் எமை நடத்தி
என்றும் காத்திடுவார்

மனதில் நிறைவு அடைந்திட மகிழ்ந்திட
பகிர்ந்து வாழச் செய்தவரே
விண்ணவர் வீட்டில் கைமாறு பெறவே
அன்புப்பணியில் வளர்ந்திடவே
நான் செல்லும் பாதையெல்லாம்
துணையாய் வந்திடுவார்






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!