Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தோமையார் தோமை மாமுனியே  

தோமை மாமுனியே எங்கள் பாதுகாவலே
எம்மைக் கண்பாருமே வந்தோம் உன் பாதமே (2)

அண்ணலாய் நீ துதிநாட்டி அவனியில் பரவிட விரும்பி - 2
உலகத்தின் இன்பத்தை வெறுத்து இறைவனின் குருவானீர் 2
உம்மை வேண்டுகிறோம் தினம் நாங்களுமே
பரலோகத்தை அளித்திடுவாய் (2)

விண்ணக வாழ்வினை வழங்க இந்நிலம் எழுந்த எம்முனியே -2
பாரத தேசம் உம் புகழை பாரெல்லாம் உரைத்திடுமே - 2
மலர் சாற்றிடுவோம் புகழ் கூறிடுவோம்
இறையாட்சியை எமக்களிப்பாய் (2)

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!