தூய தோமையார் | புலர்ந்தது புதுவாழ்வு |
புலர்ந்தது புதுவாழ்வு மலர்ந்தது வரலாறு -2 இயேசுவின் அன்பினில் சீடனாய் மலர்ந்த தோமையே நீ வாழ்க இந்திய மண்ணில் நற்செய்தி தந்த புனிதரே நீர் வாழ்க பாரதப் புனிதரின் பெருமைகளை இயற்கையும் புகழ்ந்து பாடிடுமே வேத சாட்சியாய் வாழ்ந்தவரை அகிலமும் வாழ்த்தி போற்றிடுமே நாமெல்லாம் இறைமக்கள் ஆனதும் அவரின் வரவாலே விசுவாசம் நம் வாழ்வில் வளர்வதும் அவரின் உழைப்பாலே தோமைப் புனிதரின் வரவாலே விண்ணும் மண்ணும் மகிழ்ந்திடுதே தன்னைப் பகிர்ந்தவர் வழியினிலே புனிதரின் வாழ்வும் அமைந்ததுவே - நாமெல்லாம் இறைமக்கள் ஆனதும் அவரின் வரவாலே விசுவாசம் நம் வாழ்வில் வளர்வதும் அவரின் உழைப்பாலே |