தூய தோமையார் | 1180-இயேசுவின் சீடரே தோமையே |
இயேசுவின் சீடரே தோமையே புனிதரே இந்திய நாட்டின் காவலரே (2) உந்தன் வழியில் இயேசுவைக் காண உம் திருத்தலமே நாடி வந்தோம் வாழ்த்திப் போற்றுகிறோம் வரமே வேண்டுகிறோம் வாழ்க எங்கள் தோமையாரே (2) நம்பிட மறுத்தே நீர் தவிப்பீர் காயங்கள் தொட்டு விசுவசிப்பீர் ஆண்டவரே என சரணடைந்தீர் ஆனந்தம் உள்ளத்தில் அனுபவித்தீர் (2) வாழ்த்தி ... உயிர்த்த இயேசுவின் ஆற்றலால் நற்செய்தி சொல்ல நீர் வந்தீர் -2 நாங்களும் நற்செய்தி சொல்லிடவே உந்தன் துணையை வேண்டினோம் (2) வாழ்த்தி ... |