அன்னை தெரேசாள் | அன்னை தெரேசாளை |
அன்னை தெரேசாளை அறியாதோர் இல்லை அன்பையே முழுமையாய் காட்டினாரே அடியாரின் சேவை ஆண்டவனின் தேவை என்று நீயே உணர்தினாயே (2) ஏழை எளியவரில் இறைவனைக் கண்ட ஏற்றமிகு அன்னை தெரேசாளே இயேசுவின் தாபம் தணிந்திட உம் ஏக மனதைத் தந்தவரே வாழ்க வாழ்க அன்னையே வாழ்க வாழ்க வாழ்க அன்னையே வாழ்க நோயாளிகளின் ஆறுதல் நீயே நலிந்தவர்களின் நலமே நீ பலகோடி மக்களின் இதயத்தில் நீயே நிரந்தரமாய் குடியிருப்பாய் வாழ்க வாழ்க அன்னையே வாழ்க வாழ்க வாழ்க அன்னையே வாழ்க பாரில் உம்புகழை அறியாதோர் இல்லை பாமரனின் பசியைத் தீர்ப்பாயே பசித்தோர் நலனில் அக்கறை கொண்ட பாரதத்தில் வாழ்ந்த எம் அன்னையே வாழ்க வாழ்க அன்னையே வாழ்க வாழ்க வாழ்க அன்னையே வாழ்க கைவிடப்பட்டோரின் காரிகையும் நீயே கலங்கியோர்க்கு கலங்கரை விளக்கே சீறீரங்கம் எங்கும் வாழுகின்ற மங்கா செல்வமே மாதரமே வாழ்க வாழ்க அன்னையே வாழ்க வாழ்க வாழ்க அன்னையே வாழ்க கன்னியராம் அன்னையே மண்ணுலகின் தேவதையே பெண்ணினத்தின் பெருமையே உன் போர் வாழ்க உன்னைப்பின் பற்றும் கன்னியரின் காவலரே ஆலமரமாய் நீடு வாழ்க வாழ்க வாழ்க அன்னையே வாழ்க வாழ்க வாழ்க அன்னையே வாழ்க |