புனித செபஸ்தியார் | 1172-யேசுவின் தாசரே |
யேசுவின் தாசரே சேனைத் தளபதியே நேசமுடன் தாழ் பணிந்தோம் காரும் செபஸ்தியாரே கள்ளி மரத்தினில் கையும் காலும் கட்டி அம்பால் எய்யச் சகித்தீர் தள்ளி உதைத்து தரையில் வீழ்த்தி அடிக்க உயிர் விடுத்தீர் தீயவனாம் அந்தத் தியோக்கிலேசியான் செய்த கொடுமை எல்லாம் தூயனே வென்று தேவனை வாழ்த்தி நீர் வேத சாட்சியானீர் பஞ்சம் படை கொள்ளை பொல்லாப் புயல் வேளை காத்திட வேண்டுமையா கெஞ்சி நின்றோம் எங்கள் கூக்குரல் கேட்டெம்மை ஆசீர்வதியுமையா |