புனித செபஸ்தியார் | 1171-நோய்நொடி நீக்க வல்லவரே |
நோய்நொடி நீக்க வல்லவரே - எம் பார்புகழ் புனித செபஸ்தியாரே வேதத்திற்காய் உயிர் தந்தவரே யாவர்க்கும் அருள்வரம் தருபவரே -2 போற்றிப் புகழ்ந்து பாடிடுவோம் நம் புனிதன் பெருமைகளை -2 இறையாட்சி மண்ணில் மலர தன்னையே தந்தவராம் - நம் இறைஇயேசு உரைத்த நல்வழியில் என்றுமே வாழ்ந்தவராம் (2) இறைஞ்சுவோர்க்கிரங்கி இறைவனை வேண்டி நிறைவரம் தருபவராம் அவர் புகழினைப் பாடிடுவோம் -2 உயர்ந்த குலத்தில் பிறந்து வளர்ந்த கோமகனாம் - எம் பாவை நகர் வீற்றிருக்கும் பாதுகாவலராம் (2) வைசூரி அம்மை வாந்தி பேதி நீங்கிடச் செய்பவராம் அவர் |