புனித செபஸ்தியார் | 1169-புனித செபஸ்தியாரின் புகழ் மணக்க |
புனித செபஸ்தியாரின் புகழ் மணக்க அவர் பொன்னடி பணிவோம் அருள் சிறக்க மனிதருள் சிறந்த மாணிக்கமவரே மலையிலும் பலம் நிறை மனம் படைத்தவரே நிலையினில் தவறா நேர்மையுமவரே நித்திய மறையின் தியாகியுமவரே உரோமையின் மன்னனின் கொடுங்கோல் தனையே உடைத்தவன் ஆணவம் அடங்கி ஒழியவே சேவையின் பலனாய் ஜெயமே கொண்டு சத்திய மறைதனை காத்தவரான வைசூரி அம்மை நேய்களினாலே வாடிய இறைமக்கள் குணம் அடைந்திடவே தெய்வீக மருத்துவ சேவை செய்தே உண்மை தெய்வத்தினருளால் பலன் கண்டனரே |