புனித செபஸ்தியார் | 1167-செபஸ்தியார் புகழ் பாடுவோம் |
செபஸ்தியார் புகழ் பாடுவோம் வாருங்கள் மாந்தர்களே அவர் செய்து வரும் நன்மைகளை நாளெல்லாம் பாடிடுவோம் இயேசுவுக்காய் இன்னல்களை ஏற்றவர் நம் புனிதர் தாய் திருச்சபைக்காய் இன்னுயிரை ஈந்தவர் நம் புனிதர் இயேசுவையும் மாந்தரையும் அவர் போல் அன்பு செய்வோம் அவர் வழியில் நாம் வாழ இன்னருள் கேட்டிடுவோம் பார்போற்றும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர் செபஸ்தியார் பிறரன்பில் இறையன்பில் முதிர்ந்தவர் செபஸ்தியார் வீர மிகு விசுவாசம் வில்லம்பால் நல்மரணம் அவர் தானே நம் புனிதர் அவர் வழி நாம் நடப்போம் |