Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித செபஸ்தியார் 1167-அண்ணலே செபஸ்தியாரே  
அண்ணலே செபஸ்தியாரே அருள்தணலே எம் காவலே
உம்மைக் கொண்டாடி மகிழும் எம் வாழ்வு தழைக்க
மன்றாடி அருள் புரிவீர் எமக்காய் (2)

மெய்மறை வீரரென உலகம் மெச்சும்படி வாழ்ந்தவரே - 2
பொய்யுரும் நெஞ்சங்களைத் தேற்றி விசுவாசம் பொழிந்தவரே - 2
நோய்நொடி போக்கி நற்செய்தி சொல்லி
இயேசுவுக்காய் உயிர் துறந்தவரே -2 வாழ்க வாழ்க - 2

இயேசுவின் அன்பினின்று உம்மை எதுவும் பிரிக்கவில்லை - 2
அம்புகள் ஈட்டிகளால் உந்தன் ஆன்மா அழியவில்லை - 2
நாங்களும் உம்மைப்போல் விசுவாசம் காத்து
நிறைவாழ்வு அடைய அருள்வீரே -2 வாழ்க வாழ்க - 2


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!