Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சவேரியார் 1166-புனித சவேரியாரே வாழ்க  

புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரே
எங்கள் நாடு நலம்பெறவே உம் திருவுடல் விட்டுச்சென்றீரே (2)
ஏ...ஏ... புனித சவேரியாரே ... லாலா வாழ்வோம் உமைப்போலே

 பல்கலையில் சிறந்தீர் பாரீசையும் துறந்தீர் பாரத நாட்டுக்கு வந்தீர்
ஒருகையில் சிலுவை மறுகையில் மணியை
ஏந்திச் சொன்னீர் இயேசுவை (2) - ஏ...ஏ... புனித...

உலகினில் பிறந்து நாடுகள் ஐந்து பாடுது உலகம் புகழ்ந்து
உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து
தொடர்வோம் இயேசுவில் இணைந்து (2) - ஏ...ஏ... புனித...


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!