Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சவேரியார் 1165-பாமாலை பாடிடுவோம் சவேரியாரே  

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே (2)
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு
கோயில்கட்டிக் கும்பிடுவோம் சவேரியாரே (2)

இயேசுசாமி வாத்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே -2
வாழியவே வாழியவே சவேரியாரே எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -2
வாழியவே வாழியவே சவேரியாரே எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!