Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சவேரியார் 1164-உலகமெல்லாம் எனக்காதாயம்  


உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை 2
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா 2
இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார் அவரே புனித சவேரியார்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் 2
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லா ஆன்மாதான் 2

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை 2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லா ஆன்மாதான் 2









 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!